[X] Close

ஸ்ரேயாவுடன் நடிக்கும் விமல்


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 10:37 am
  • அ+ அ-

-Nagappan K_50181

ஆர்.மாதேஷ் இயக்கும் 'சண்டகாரி- தி பாஸ்' படத்தில் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

விஜய் நடித்த 'மதுர', பிரசாந்த் நடித்த 'சாக்லெட்', விஜயகாந்த்  நடித்த 'அரசாங்கம்', வினய் நடித்த 'மிரட்டல்', த்ரிஷா நடித்த 'மோகினி' ஆகிய படங்களை இயக்கியவர் மாதேஷ்.

மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'மை பாஸ்' என்ற படத்தைத் தழுவி தமிழில் 'சண்டகாரி- தி பாஸ்' திரைப்படம் உருவாகிறது. இதில் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

பிரபு, சத்யன்,  கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், 'மகாநதி' சங்கர்,   உமா பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் 'மகதீரா' தேவேந்தர் சிங் கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குருதேவ் ஒளிப்பதிவில் அம்ரீஷ் இசையில் உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநர்  மாதேஷ் கூறுகையில்,  "வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம் .முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பெரும் பகுதி வெளிநாடுகளில் படப் பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது.  தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close