[X] Close

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: எஸ்.பி.ஜனநாதன் மனுவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை


  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:20 am
  • அ+ அ-

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட் டியல் இன்று வெளியிடப்படுகிறது.

2017 19 ஆண்டுக்கான தமிழ்த் திரைப் பட இயக்குநர் சங்கத் தேர்தல் வரும் 21-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குநர்கள் அமீர், ரத்தின கணபதி, ஆர்.கே.செல்வமணி, சி.வி.வித் யாசாகர், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக் கல் செய்திருந்தனர். இதில் ஏற்கப் படாத வேட்புமனுக்கள் பற்றிய விவ ரத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்கு நர்கள் சங்கம் நேற்று முன்தினம் வெளியிட் டது. அதில், முன்மொழிதல், வழி மொழிதல் விதிப்படி தலைவர் பத விக்கு போட்டியிடுபவர் இன்னொரு வேட்பாளருக்கு முன்மொழிதல், வழி மொழிதல் கூடாது.

ஆனால் இயக்குநர் அமீர், தலை வர் பதவிக்கு போட்டியிட இயக்கு நர் எஸ்.பி.ஜனநாதனை முன்மொழிந் திருக்கிறார். விதிமுறைகளை மீறி முன் மொழிதல் செய்திருப்பதால் அமீரின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. அமீரின் விதிமீறிய முன்மொழிவால் எஸ்.பி.ஜன நாதன் வேட்புமனுவும் ஏற்கவில்லை என அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் சங்கத்துக்கு எஸ்.பி.ஜனநாதன் ஒரு கோரிக்கை மனுவை அளித் துள்ளார். இந்த மனுவில், “இயக் குநர் சங்கத் தேர்தல் விதி 20-ன் படி எனது மனு நிராகரிக்கப்பட்டதை அறிந்தேன்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் வேறு ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மனுவை முன்மொழி யவோ, வழிமொழியவோ கூடாது என்பதை அறிவேன். ஆனால், நான் யாரு டைய பெயரையும் தலைவர் பத விக்கு முன்மொழியவோ, வழி மொழி யவோ இல்லை.

ஆகவே எனது தலைவர் பதவிக்கான மனுவை மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலை யில் வேட்பாளர்கள் இறுதிப்பட்டி யல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close