[X] Close

ரூ.24 லட்சம் மோசடி புகார் வழக்கில் விசாரணை நடத்த நடிகை சோனாக்ஷி வீட்டுக்கு சென்ற உ.பி. மாநில போலீஸார் ஏமாற்றம்


24

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:04 am
  • அ+ அ-

பண மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உ.பி. போலீஸார் மும்பையில் உள்ள நடிகை சோனாக்ஷி சின்ஹா வீட்டுக்கு சென்றதாகவும் அவர்இல்லாததால் திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இந்தி நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின்மகள் சோனாக்ஷி. தமிழில் ‘லிங்கா’திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரூ.24 லட்சம் பணம் பெற்றதாகவும் ஆனால், அவர் கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பிரமோத் சர்மா புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, மொரதாபாத் போலீஸார் நேற்று முன்தினம் மும்பை சென்றனர். ஜுஹு காவல் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் சோனாக்ஷியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் சில மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பி வந்துவிட்டனர். எனினும், போலீஸார் மீண்டும் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சோனாக்ஷி கூறும்போது, “நான் இதுவரை நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்து வருகிறேன். என் மீதானகுற்றச்சாட்டு பொய்யானது. என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற செயலில் சிலர்ஈடுபடுகின்றனர். எனினும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். இதுபோன்ற நேர்மையற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close