[X] Close

திரை விமர்சனம்- ராட்சசி


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 07:42 am
  • அ+ அ-

கிராமத்து அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக பொறுப்பேற்கிறார் ஜோதிகா. ஒழுங்கில்லாத மாணவர் கள், பொறுப்பில்லாத ஆசிரியர்கள், பாதுகாப்பு இல்லாத பள்ளிக் கட்டிடங் கள் என அங்கு எல்லாமே தவறாக இருப்பதை கவனிக்கிறார். அங்கு பணி புரியும் சில ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர் கவிதாபாரதி ஆகி யோரின் அலட்சியப் போக்கே இதற் கெல்லாம் காரணம் என்பதை அறி கிறார். உடனடியாக கவிதாபாரதியை இடைநீக்கம் செய்துவிட்டு, பள்ளியை சீரமைக்கும் பணியில் அதிரடியாக இறங்குகிறார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் கட்சிப் பிரமுகர், தனியார் பள்ளி தாளாளரால் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். ஜோதிகா அவர்க ளது சதி வலையில் சிக்கி சறுக்கு கிறாரா? அல்லது, தான் விரும்பியது போல அரசுப் பள்ளியையும், மாணவர் களையும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றாரா? இதுவே ‘ராட்சசி’ களம்.

இன்றைய தலைமுறையின் சீரழி வுக்கு பொறுப்பற்ற சில ஆசிரியர் களே முக்கிய காரணம் என்பதை மைய மாகக் கொண்டு நகரும் கதை. சொல்ல வந்ததை தெளிவாக கூறி யிருக்கிறார் இயக்குநர் கவுதம்ராஜ். ஆசிரியர்களுக்கு எதிராக சமுத்திரக் கனி சொடுக்கிய ‘சாட்டை’யை, இதில் ஜோதிகாவைக் கொண்டு சுழற்ற வைத்திருக்கிறார். ஒரு கிராமம், ஒரு பள்ளி, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் என ஒரு வட்டத்துக்குள் கதைக்களம் சுழன்றாலும், அடுத்தடுத்து சரியான கேள்விகள், அதற்கான விடைகளை பூர்த்தி செய்துகொண்டே தொய்வின்றி நகர்கிறது திரைக்கதை.

காட்டன் புடவை கெட்டப்பில் ‘அறம்’ நயன்தாராவை நினைவூட்டி னாலும், பொறுப்புள்ள தலைமை ஆசி ரியராக, நடிப்பில் உண்மையாகவே ராட்சசியாக மிரட்டியிருக்கிறார் ஜோதிகா. கோபம், பாசம் ஆகிய வற்றை தேவையான இடத்தில் நன்கு வெளிப்படுத்துகிறார். படம் முழுவதும் விறைப்பாக வலம் வந்து, அத்தனை உணர்ச்சிகளையும் பார்வையிலேயே அநாயாசமாக வெளிக்காட்டி ரசிக்க வைக்கிறார்.

ஹரீஷ் பெராடி அலட்டல் இல்லாத நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கவிதா பாரதி, அருள்தாஸ், பூர்ணிமா பாக்ய ராஜ், ஜோதிகாவின் தந்தையாக வரும் நாகிநீடு, ஆட்டோ ஓட்டும் மூர்த்தி உள் ளிட்டோரின் கதாபாத்திரத் தன்மையும், அவர்களது நடிப்பும் சிறப்பு. 2-ம் வகுப்பு படிக்கும் சுட்டிப் பையனின் சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன.

பொறுப்பற்ற மனிதர்கள் சூழ்ந்த, சுகாதாரமற்ற ஒரு பள்ளி, நல்ல தலைமை ஆசிரியரின் வருகைக்கு பிறகு புத்துயிர் பெறும் காட்சிகள் உயிரோட்டமாக உள்ளன. கதைக்கு பெரும் அடித்தளம் வசனம். ‘குற்ற வாளிகளையும், கூலித்தொழிலாளர் களையும் உருவாக்க பள்ளிக்கூடம் எதற்கு?’, ‘வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்குறவங்க மட்டுமே அரசாங்க பள்ளியில் படிக்கிறாங்க. உயர்கல்வி யில் அவங்களுக்கு 50 சதவீதம் ஒதுக் கினாலே வறுமையைப் போக்கலாம்’ என்பது போன்ற இடங்களில் பாரதி தம்பி - கவுதம்ராஜின் கூர்மையான வசனங்கள் படத்துக்கு வலுசேர்க் கின்றன.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை, மனதுக்கு இதம். சில இடங்களில் மான்டேஜ் பாடல்கள், தேவையற்ற இடைச் செருகல். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு சிறப்பு.

ஜோதிகாவின் ராணுவத் துறை வாழ்க்கைப் பின்னணி, பூர்ணிமாவுக் கும் அவருக்குமான தொடர்பு, தந்தையின் இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு அதே நாளில் பள்ளிக்கு புறப்பட்டுப் போவது என சில இடங் களில் மட்டும் சினிமாத்தனம்! நமது கல்விமுறை சரியில்லை என்று குற்றம் சாட்டும் ‘ராட்சசி’ அதற்கான தீர்வாக வலுவான யோசனை எதையும் முன் வைக்கவில்லை. ஜோதிகா தவிர, மற்ற அனைத்து ஆசிரியர்களையும் விவரம் இல்லாதவர்களாக காட்டு வதும், ஒரே பள்ளியைச் சுற்றி நாடகத் தனமாக காட்சிகள் நகர்வதும், ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது. மாணவ, மாணவியரின் நலனை கருத் தில்கொண்டு ஜோதிகா எடுக்கும் தைரியமான முடிவும், அதற்காக படத்தின் இறுதியில் அவர் எதிர்கொள் ளும் நிகழ்வும் வெகுவாக கவர்கிறது.

ஆசிரியர்கள் சரியாக இருந்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்ற கருத்தை, தற்போதைய நடைமுறை சம்பவங்களோடு பிணைத்து பிரதிபலித்துள்ளது பாராட்டுக்குரியது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக கொஞ்சம் ஓவராகவே பொங்கியிருந்தாலும், ஜோதிகாவுக்காக பொறுத்துக் கொள்ளலாம்.

talkies.JPG 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close