[X] Close

சென்னையில் உள்ள 3 முக்கிய சாலைகளின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும்; கட்டாய ஹெல்மெட் தொடர்பான வழக்கில் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு


3

  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 07:45 am
  • அ+ அ-

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக போலீஸார் சரியானஅறிக்கையை தாக்கல் செய்துள்ளனரா என்பதை பரிசோதிக்க, கடந்த ஜூலை 2-ம் தேதி சென்னையின் 3 முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரியவழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர்  அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அதில், சென்னைமாநகரின் பிரதான சாலைகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில்  பதிவாகும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு சம்மன் அனுப்பி நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

90 ஆயிரம் பேருக்கு சம்மன்

அதையடுத்து நீதிபதிகள், ‘‘சென்னையின் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலம்  ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுவும் அண்ணாநகர் பகுதியில் மட்டுமே இதுபோல ஹெல்மெட் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் களில் ஈடுபட்ட 90 ஆயிரம் பேருக்கு சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இன்னும் இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் யாரும் ஹெல்மெட் அணிவது இல்லை.

விசாரணை தள்ளிவைப்பு

எனவே சென்னை போக்கு வரத்து போலீஸார்  கடந்த ஜூலை2-ம் தேதி சென்னை கடற்கரைசாலையில் மலர் மருத்துவமனை முதல் ரிசர்வ் வங்கி  வரையிலும், பூந்தமல்லி பிரதான சாலையில் பச்சையப்பா கல்லூரியில் இருந்து சென்ட்ரல் சென்னை மருத்துவ கல்லூரி வரையிலும், அண்ணா சாலையில்  கத்திப்பாராவில் இருந்து மன்றோ சிலை வரையிலும் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான  காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல அன்றைய தினம் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாரின் விவரங்க ளையும் தாக்கல் செய்ய வேண்டும்”என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 12-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close