[X] Close

புதிய அம்சங்கள்


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 07:20 am
  • அ+ அ-

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘நாளைய இயக்குநர்-6’, திண்டுக்கல் லியோனியின் பேச்சுத் திருவிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் புதிய வடிவம் பெற உள்ளன. இதில், பா.விஜய்யின் ‘நெஞ்சே எழு’ மற்றும் ‘நம்ம வீட்டு நட்சத்திரம்’, ‘ரெட் கார்பெட்’, ‘ஸ்டார் வேர்ல்டு’, ‘சூப்பர் பேமிலி’ போன்ற பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளும் அங்கம் வகிக்கின்றன. விஜயலட்சுமி, மவுனிகா, சமிதா நடிப்பில் ‘டும் டும் டும்’, ‘பூவே செம்பூவே’ போன்ற நெடுந்தொடர்கள், நடிகர் ஜெகன் தொகுத்து வழங்கும் ‘இங்க என்ன சொல்லுது’ என்ற பிரபலங்களுக்கான நிகழ்ச்சி ஆகியவையும் ஜூலை முதல் ஒளிபரப்பாகிறது.

‘‘இந்த சீரமைப்புக்காக புதிய குழுவை உருவாக்கினோம்.  அதன் அடிப்படையில் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்னும் அதிக பொழுதுபோக்கு அம்சங்கள் இனி கலைஞர் தொலைக்காட்சி வழியே கிடைக்கும்’’ என்று தொலைக்காட்சி நிர்வாகத்தினர் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close