[X] Close

சின்னத்திரை உலகம் மாறிடுச்சு!


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 07:19 am
  • அ+ அ-

சன் டிவியின் ‘ரோஜா’ தொடர் வழியே கவனம் பெற்று வருபவர் ரம்யா. இவர், சசிகுமார் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய ‘தலைமுறைகள்’ படத்தில் நடித்தவர். அவர் தற்போது சசிகுமார் நடிக்கும் ‘ராஜவம்சம்’ படத்தில் நடித்து வருகிறார். 

‘‘சின்னத்திரையோ, பெரிய திரையோ.. நல்ல கதாபாத்திரம் என்றால் உடனே ஒப்புக்கொள்வேன். அதுபோலத்தான் இப்போ சசிகுமார் படமும் அமைந்தது. ‘தலைமுறைகள்’ படத்தைவிட இதில் இன்னும் சற்று அதிக ரோல். சன் டிவியில் ‘ரோஜா’ தொடர் சிறப்பாக நகர்கிறது. ஆரம்பத்தில் நெகடிவ் கதாபாத்திரம் என்றுதான் உள்ளே வந்தேன். நானே கொஞ்சம் கொஞ்சமா அந்த ரோலை காமெடி கலந்த நெகடிவ் பக்கத்துக்கு கொண்டு போனேன். ஆடியன்ஸ் ரசிக்க ஆரம்பிச்சாங்க. சீரியல் குழுவுக்கும் ரொம்ப பிடித்துவிட்டது’’ என்றார் ரம்யா.

‘‘சீரியல்களில் தமிழ் முகங்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறதே’’ என்றால், ‘‘முன்பு மலையாள நடிகர், நடிகைகளை இறக்குமதி செய்தமாதிரி இப்போ மும்பை, ஹைதராபாத் நடிகர், நடிகைகள்தான் வேண்டும் என சீரியல் தயாரிப்பு குழு தீர்மானமாக இருக்காங்க. அவங்கதான் செவப்பா இருக்காங்களாம். அதுக்காக, இங்கே உள்ள பல நடிகர், நடிகைகள் ஆயில், கிரீம், ஊசி, மருந்து என்று கிளம்பிட்டாங்க. இது எங்கே போய் முடியப்போகுதோ’’ என்கிறார் ரம்யா.  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close