[X] Close

'தர்பார்' பட பாடல் காட்சி: விவரித்த எஸ்.பி.பி


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 11:32 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'தர்பார்' படத்தில் தன் பாடியுள்ள பாடல் மற்றும் அதன் காட்சியமைப்பையும் எஸ்.பி.பி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'தர்பார்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டார்கள். இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டுமே இருப்பதாக, படக்குழுவினர் தெரிவித்தார்கள். 'பேட்ட' படத்தைப் போலவே, 'தர்பார்' படத்திலும் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பியே பாடியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இசையமைப்பாளர் அனிருத்தோ, எஸ்.பி.பியோ இதுகுறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடாமல் இருந்தார்கள். தற்போது மலேசியாவில் நிகழ்ச்சியில் ஒன்றில் எஸ்.பி.பி பேசிய வீடியோ பதிவு ஒன்று ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

அதில் எஸ்.பி.பி, 'தர்பார்' படத்தின் பாடியிருப்பதையும், அந்தப் பாடல் படத்தில் இடம்பெறும் காட்சியமைப்பையும் விவரித்துள்ளார். அதில் எஸ்.பி.பி, “ஒரு அருமையான காட்சி. மும்பையில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்துகிறார்கள். அந்த விழாவில் "எனக்கு எதுக்கு பாராட்டு விழா நடத்துகிறீர்கள்.

நான் ஒரு சாதாரண ஆள். நான் என் கடமையைத் தானே செய்திருக்கிறேன். பாராட்டு தேவையில்லை" என்பார். நான் இந்த உடையைப் போட்டிருப்பதால், ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்கிறீர்கள். இதை கழட்டிவிட்டேன் என்றால், உங்களில் ஒருவன் என்று சொல்லி, அந்த மாஸுக்கு ஒரு பாட்டு பாடுவார். அந்தப் பாடல் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. நன்றி அனிருத், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சூப்பர் ஸ்டார்!” என்று தெரிவித்துள்ளார்

தற்போது மும்பையில் கடுமையாக மழை பெய்து வருவதால், 'தர்பார்' படப்பிடிப்புக்கு 10 நாட்கள் இடைவெளி விட்டுள்ளனர். விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக பயணிக்கவுள்ளது படக்குழு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close