[X] Close

ஒரே கட்டமாக 'ஏலே' படப்பிடிப்பு நிறைவு


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 11:33 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வந்த 'ஏலே' படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு.

'ஓரம்போ' படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் - காயத்ரி. 'விக்ரம் வேதா' தந்த வெற்றிக்குப் பிறகு, தற்போது புதிதாக ‘வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்’  என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ஏலே' படம் குறித்த அறிவிப்பை மே 2-ம் தேதி வெளியிட்டனர். அன்றைய தினமே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டது படக்குழு. அதைப் போலவே, ஜூன் 30-ம் தேதியுடன் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள்.

இதில் நடித்துள்ள சமுத்திரக்கனி, “ஏலே..! திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது... வெல்வோம்...!” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார். இதற்கு இயக்குநர் ஹலிதா ஷமீம், “ ஒரே மூச்சாக படத்தை முடித்தது பிரமிப்பை தருகிறது. உங்களின் அர்ப்பணிப்பின்றி இது நடந்திருக்க இயலாது. நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார்.

'ஏலே' படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ளனர். முழுக்க காமெடிப் பின்னணியில் 'ஏலே' கதையை உருவாக்கியுள்ளார் ஹலீதா ஷமீம். இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close