[X] Close

திரை விமரசனம்- ஜீவி


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 06:47 am
  • அ+ அ-

எதையும் துருவித் துருவி ஆராய்ந்து பார்க்கும் இளை ஞன் வெற்றி. 8-ம் வகுப்பை தாண்டாவிட்டாலும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கே புரா ஜெக்ட் செய்துதரும் அளவுக்கு செயல்முறை அறிவில் கெட்டிக் காரன். வேலைக்குச் செல்லாமல் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றும் அவனை சென்னைக்கு அனுப்பிவைக்கின்றனர் பெற் றோர். அங்கு நண்பன் கருணா கரனுடன் வாடகை வீட்டில் வசித் துக்கொண்டு, கிடைத்த வேலை களை செய்து பிழைப்பை ஓட்டு கிறான். இவனது அக்கா, காதல னோடு வீட்டைவிட்டு வெளி யேறிய அதிர்ச்சியில் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். இதற்கிடையில், காசு, பணம் இல்லாத இவனிடம் இருந்து காதலியும் விலகுகிறாள். இந்த சூழலில், அவன் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளர் ரோகிணியின் பீரோ சாவி அவனுக்குக் கிடைக் கிறது. பார்வையிழந்த மகள் திரு மணத்துக்காக அவர் சேர்த்து வைத்திருக்கும் 50 பவுன் நகை களை, சாதுர்யமாக திருடுகிறான். அப்போது, ஊரில் தந்தை இறந்து விடுவதாக தகவல் வருகிறது. தன் குடும்பத்தில் நடக்கும் சம்பவங் களுக்கும், ரோகிணியின் குடும் பத்தில் நடக்கும் சம்பவங்களுக் கும் மர்மமான தொடர்பு இருப் பதை உணர்கிறான். அதன் பிறகு அவன் என்ன செய்தான்? திருடிய நகை என்ன ஆனது? போலீஸ் அவனை என்ன செய்தது? இக் கேள்விகளுக்கு விடை சொல் கிறது ‘ஜீவி’.

சுடோகு போல மூளைக்கு வேலை தரக்கூடிய அறிவுப்பூர்வ மான திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதை பிசிறு இல்லா மல் இயக்கிய அறிமுக இயக்கு நர் வி.ஜெ.கோபிநாத்துக்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து. ‘முக் கோண எஃபெக்ட்’, ‘தொடர்பியல்’ என பார்வையாளர்களின் மூளைக்கு வேலை தரும் விஷயங் களைப் பொருத்தி, ஸ்கிரிப்ட்டில் சிக்ஸர் அடிக்கிறார். நண்பனி டம் விளக்குவதுபோல காட்சி களின் சிக்கல் சிடுக்கை விளக்கிய பாணி புத்திசாலித்தனம். இதில் எடிட்டர் பிரவீனின் பங்கும் பெரிது. கோபிநாத்துடன் கைகோத்து வச னங்களுக்கு புத்துணர்வு ஊட்டு கிறார் பாபு தமிழ்.

திரில்லர் படத்துக்குரிய அம் சங்களை வைத்துக்கொண்டு, அதேநேரம், திரில்லருக்கான திகில் காட்சிகளாக இல்லாமல் கதையோட்டத்தை விறுவிறுப் பாக படமாக்கியிருப்பது பெரும் பலம். படத்தை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படும் போது, திடீர் திருப்பத்துடன் படத்தை முடித்திருப்பதில் ‘ஜீவி’ கெத்து காட்டுகிறது.

‘8 தோட்டாக்கள்’ படத்தை விடவும் நடிப்பில் நன்கு முதிர்ச்சி அடைந்திருக்கிறார் வெற்றி. கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். வேலை வெட்டி இல்லாமல் சுற்றுவது, திருட பிளான் போடுவது, மாட்டிக் கொள்ளாமல் இருக்க தகிடுதத்தம் செய்வது என நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார். ஆனால், அந்த அளவுக்கு உடல்மொழி ஒத் துழைக்க மறுக்கிறது. கருணா கரன் அப்பாவித்தனமாக முழிப் பது, அவருக்கும், திரைக்கதைக் கும் பெரிய பலம். ரோகிணி, மைம் கோபி அவரவர் கதாபாத்தி ரத்துக்கு தேவையானதை செய் துள்ளனர்.

மொட்டை மாடியில் இருந்து, கம்பத்தில் இருந்து பறக்கும் காகங் கள், எப்போது வேண்டுமானாலும் சுழன்றுவிழக்கூடிய பழங்காலத்து மின்விசிறி.. இப்படி சின்னச் சின்ன விஷயங்களைப் பயன்படுத்தி திரைக்கதையில் மர்மத்தை கூட்டு கின்றனர். ஒரு வீட்டின் அறைக் குள்ளே காட்சிகளை அலுப்பூட்டா மல் கடத்திய விதம் அருமை.

திருட்டு வழக்குகளில் விளிம்பு நிலை மக்களை போலீஸ் குறி வைப்பதை காட்சிகளில் உணர்த்தி யிருப்பது ரசிக்க வைக்கிறது. சிறுபான்மையினர் மீதும், வீட்டுப் பணியாளர்கள் மீதும் குற்றங் களைச் சுமத்திவிட்டு தப்பிச் செல்லும் அக்கிரமம் நம் சமூகத் தில் காலம்காலமாக நடப்பதை யும் மெல்லிய நூலிழையில் குறிப் பாக உணர்த்துகிறார் இயக்குநர்.

காட்சி நகர்வுக்குத் தேவை யான இசையை சுந்தரமூர்த்தி வழங்கியுள்ளார். நாயகன் அறி முகம், டூயட் பாடல் காட்சி களில் சப்தங்கள் எரிச்சலூட்டு கின்றன. பிரவீன் குமாரின் ஒளிப் பதிவு சிறப்பு.

‘நானே பாதிக்கப்பட்டேன்.. நேரடியாக பாதிக்கப்பட்டேன்’, ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ என்றெல்லாம் கர்ஜித்து தனி மனிதர்களையோ, சமூகத் தையோ எப்படி வேண்டுமானா லும் பழிவாங்கி தங்களது கோபத்தை, பாதிக்கப்பட்டவர்கள் தீர்த்துக்கொள்ளலாம் என்ற தமிழ் சினிமாவின் அநியாயமான நீதி போதனையில் இருந்து படம் துல்லியமாக விலகியது பாராட்டுக் குரியது. வழக்கமான திரில்லரில் இருந்து மாறுபட்டு, அறிவுப்பூர்வ மான திரைக்கதையால் உயர்ந்து நிற்கிறது ‘ஜீவி’.

fdsr.JPG 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close