[X] Close

அப்பாவைப் போல் 10% ஆவது இருக்க ஆசை: ஓய்வுபெறும் தந்தை குத்வாலா ஐபிஎஸ் குறித்து விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி


10

  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 17:55 pm
  • அ+ அ-

அப்பாவைப் போல் 10 சதவீதமாவது இருக்க ஆசைப்படுகிறேன் என்று பணி ஓய்வு பெறும் தந்தை குத்வாலா ஐபிஎஸ் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''பொது சேவையில் 32 ஆண்டுகள். ஏராளமானவர்களின் வாழ்க்கைக்கு என் தந்தை உதவி செய்ததைப் பார்த்திருக்கிறேன். இன்று அவர் பணி ஓய்வு பெறுகிறார். அப்பாவை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

கடவுளுக்கும் இந்தப் பயணத்தில் உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். முதல் புகைப்படம் அப்பா தனது சீருடையில் எடுத்தது. அடுத்தது, அவர் தனது பேரனுடன் கடைசி நாள் அலுவலகத்தில் எடுத்தது.

D-WEW0jU4AAkj-5.jpg 

அவரைப் போல் வெறும் 10 சதவீதமாவது இருக்க ஆசைப்படுகிறேன். அதுவே என்னைச் சிறப்பான மனிதனாக மாற்றும். (என் அப்பா குறித்துத் தெரிந்தவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்)

சினிமா மூலம் அவரின் கதைகளை இந்த உலகத்துடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நிஜ லைஃப் ஹீரோ இன்று தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார். உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close