[X] Close

மீண்டும் ப்ளூ ஜெர்சி வேண்டும்: ‘காலா’ ஹுமா குரேஷி வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 12:55 pm
  • அ+ அ-

இந்திய கிரிக்கெட் அணியின் ஆடையாக மீண்டும் ப்ளூ ஜெர்சியே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை ஹுமா குரேஷி.

2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியைத் தோற்கடித்தது இங்கிலாந்து அணி. இந்த வருட உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத இந்திய அணி, இதன்மூலம் முதன்முறையாகத் தோல்வியைத் தழுவியது.

அத்துடன், 1992-ம் ஆண்டுக்குப் பிறகு 27 வருடங்கள் கழித்து உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி.

இதற்கு முன்னர் ப்ளூ ஜெர்சியை சீருடையாக அணிந்து ஆடிய இந்திய அணி, நேற்று முதன்முதலாக ஆரஞ்சு மற்றும் கருநீலம் கலந்த ஜெர்சியை சீருடையாக அணிந்து ஆடியது. இந்தப் புதிய சீருடை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, இந்தச் சீருடைதான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என்றுகூட விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி கூட இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்நிலையில், ‘காலா’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி, மீண்டும் ப்ளூ ஜெர்சியே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இது மூடநம்பிக்கையெல்லாம் இல்லை. ஆனால், தயவுசெய்து மீண்டும் ப்ளூ ஜெர்சியே வேண்டும், அவ்வளவுதான்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close