[X] Close

இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 14:45 pm
  • அ+ அ-

நடிகை அமலா பாலை விவாகரத்து செய்த இயக்குநர் விஜய்க்கு, இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது.

அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். தயாரிப்பாளர், நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இவர். ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, ‘வனமகன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

‘தெய்வத் திருமகள்’ படத்துக்காக தமிழக அரசின் இரண்டு விருதுகள் கிடைத்தன. இந்தப் படத்தில் நடிக்கும்போது, இவருக்கும், அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக இந்த விஷயம் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், அதைப்பற்றி இருவரும் வாய் திறக்கவில்லை.

ஒருவழியாக, 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தார் விஜய். அந்த வருடம் ஜூன் 7-ம் தேதி கேரளாவில் நிச்சயதார்த்தமும், 12-ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது.

ஆனால், இந்தத் திருமண உறவு இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து, 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றனர். ஆனால், அதன்பின் இருவருமே இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, இரண்டாவது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் விஜய். மணமகள் ஐஸ்வர்யா, எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சென்னை, மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன் பாபு - அனிதா தம்பதியின் மகள் இவர்.

இவர்களுடைய திருமணம், அடுத்த மாதம் (ஜூலை) 11-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close