[X] Close

ஜான்வி கபூர், கார்த்திக் ஆர்யன் நடிப்பில் ‘தோஸ்தானா 2’ அறிவிப்பு


2

  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 14:11 pm
  • அ+ அ-

2008 ஆம் ஆண்டு வெளியான ‘தோஸ்தானா’ படத்தின் அடுத்த பாகத்தை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் அறிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம், பிரியங்கா சோப்ரா நடித்த படம் ‘தோஸ்தானா’. ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்க வேண்டும் என்பதால் ஓரினச்சேர்க்கை தம்பதி போல நடிக்கின்றனர் படத்தின் நாயகர்கள் இருவரும். அந்த வீட்டின் உரிமையாளர் பிரியங்காவைப் பார்த்ததும் இருவரும் காதல் வயப்படுகின்றனர். தொடர்ந்து நடக்கும் காமெடி குழப்பங்களே படம்.

இந்தப் படத்தில் அபிஷேக்கும் ஜானும் முத்தமிடும் காட்சி, படம் வெளியான சமயத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் ஆர்யனும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் நடிக்கவுள்ளனர்.

மூன்றாவதாக ஒரு புதுமுகம் நடிக்கிறார். சரியான நடிகருக்கான தேடல் நடந்து வருகிறது. காலின் டி குன்ஹா படத்தை இயக்குகிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close