[X] Close

மறைமுகமாக சாடிய குஷ்பு: நேரடியாக கடும் காட்டத்துடன் பதிலளித்த காயத்ரி ரகுராம்


  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 09:52 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

ட்விட்டரில் குஷ்புவின் மறைமுக சாடலுக்கு, நேரடியாக கடும் காட்டத்துடன் பதிலளித்துள்ளார் காயத்ரி ரகுராம்

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தீவிரமாக பாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார் காயத்ரி ரகுராம். மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவிக்கும் கருத்துகளுக்கும் பதிலடிக் கொடுத்து வருகிறார். 

ஜெய் ஸ்ரீராம் சொல்லுமாறு தாக்கப்பட்ட சம்பவத்தைக் கடுமையாக சாடியிருந்தார் குஷ்பு. இதற்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்திருந்தார். எப்போதுமே குஷ்பு, காயத்ரி ரகுராமின் எதிர் கருத்துக்குப் பதிலளித்ததே இல்லை.

தொடர்ச்சியாக தன்னை சாடி வருவதற்கு குஷ்பு பதில் அளிக்கையில், ''என்னைத் தொடர்ந்து குறிவைத்து கொண்டிருக்கும் இந்தப் பெண்ணுக்குப் பதிலளிக்க எனக்கு வெகு நேரம் ஆகாது. (இவர் சார்ந்திருக்கும் காவிக் கட்சியிலேயே எந்த அடையாளமும் இல்லாதவர்). இதோ பாருங்கள் பெண்ணே, நான் மறைந்த உங்கள் தந்தை, தாய், மற்றும் உங்கள் அத்தைகளை மதிப்பதால உங்களை அவமானப்படுத்தாமல் இருக்கிறேன். எனவே அமைதியாக உங்கள் இடத்தில் இருந்து கொள்ளுங்கள்'' என்று காயத்ரி ரகுராமுக்குத் தெரிவித்தார்.

குஷ்பு தன்னைத் தான் சொல்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட காயத்ரி ரகுராம், அவரது ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார். அதில், “நான் காவியிலும் நீங்கள் காங்கிரஸிலும் இருக்கிறோம், ஆனால் உங்களால் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க முடியவில்லை என்றால் என் குடும்பத்தை இழுப்பது உங்கள் இயலாமையைக் காட்டுகிறது.

நான் உங்கள் எதிரணியில் இருக்கிறேன். உங்களை அரசியல் ரீதியாக கேள்வி கேட்பேன். நீங்கள் தப்பிக்க முடியாது. உங்களால் பதிலளிக்க முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். எனக்கு உங்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை.

நான் என்னுடைய உரிமையின் பக்கம் நிற்கிறேன். நீங்கள் என்னை tag செய்யலாம். நான் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள மாட்டேன். நான் காவியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் தூற்றும்போது என் மதத்துக்காக நான் குரல் கொடுக்கிறேன். உங்களுக்கே இங்கே இடமில்லாத போது நீங்கள் என்னை என் இடத்திலேயே இரு என்று சொல்ல முடியாது. என்னுடைய அடையாளத்தை பற்றி நீங்கள் கருத்து கூற வேண்டியதில்லை.

எனவே நிறுத்திக் கொள்ளுங்கள். என் குடும்பம்தான் எனக்கு அடையாளம் கொடுத்தது. நான் என் வழியில் செல்கிறேன். அரசியல் லாபத்துக்காக யார் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டிங் செய்வது, யார் கேமராவுக்குப் பின்னால் இருப்பது என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு அறிவு இல்லை. எங்கள் மீது வெறுப்பை உமிழ்கிறீர்கள். நீங்களும் போலியான போராளிகளில் ஒருவர் தான் என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. காங்கிரஸின் பணபலம் உங்களைக் குருடாக்கி விட்டது.

Jai Sri Ram உங்களோடு இருப்பார். நான் அவருக்காக நேற்று ட்வீட் செய்தேன். என் ட்வீட்டுக்கு பிறகு அவர் 10000 ரீ ட்வீட்டுகள் பெற்று என் பதிவுகளை தேடிப் பிடித்து எனக்கு அடையாளம் கொடுப்பதைப் பற்றி பேசுகிறார். யாரை யார் வம்பிழுப்பது? என் குடும்பம், மனிதத்தன்மை, மதம் என்று வந்தால் நான் பொறுமையாக இருக்கமாட்டேன். நான் என் நாட்டை நேசிக்கிறேன். ஜெய்ஹிந்த், மதத்தின் மீதான வெறுப்பைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

இந்த கடும் சாடலுக்கு எந்தவொரு பதிலுமே கூறாமல் அமைதி காத்து வருகிறார் குஷ்பு. காயத்ரி ரகுராமின் இப்பதில்கள் சமூக வலைதளத்தில் சிறு சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close