[X] Close

‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்’ 2


2

  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 07:50 am
  • அ+ அ-

கலர்ஸ் தமிழ் டிவியில் கீர்த்தி சாந்தனு தொகுத்து வழங்கிய ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்’ 2–ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த இடைவெளியில்  கீர்த்தி தனது ’கிகி டான்ஸ் ஸ்டுடியோ’ வழியே விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு நடன வீடியோ மிகுந்த பாராட்டுகளை அள்ளியது. 

‘‘எனக்கும் நடனத்துக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்கும்போல. இதற்கு முன்பு ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி வழியே உலகம் முழுக்க கலக்கினோம். இப்போ கலர்ஸ் தமிழ் டிவியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்’ நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு. அந்த ஆரவாரத்தில்தான் நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான  ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கிட்டோம். காலத்துக்கேற்ற மாற்றங்களோடு, வெகு உற்சாகமா, எனர்ஜியா இருக்கும் பசங்ககூட சேர்ந்து நடனம் தொடர்பாக பயணிப்பதே ஆனந்தமா இருக்கு. இதற்கிடையில், சிறிய இடைவெளி கிடைச்சிருக்கு. இந்த நேரம் முழுக்க என் நடன ஸ்டுடியோவில்தான் இருக்கேன். விஜய் அண்ணாவுக்காக தயார் செய்த பிறந்தநாள் நடன வீடியோ அப்போ உருவானதுதான். அதற்கு நல்ல பாராட்டு. இதுபோல இன்னும் நிறைய வந்துட்டே இருக்கும்’’ என்கிறார் கீர்த்தி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close