[X] Close

நயன்தாராவுக்கு வில்லன்


  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 07:51 am
  • அ+ அ-

பிரஜன் – சான்ட்ரா தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் முகத்தை இதுவரை வெளியிடாமல் இருக்கும் தம்பதிகள் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் பெயர்சூட்டு விழா நடத்தி, புகைப்படத்தை வெளியிட  திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது பிரஜன் கூறியதாவது:

செப்டம்பர்ல என் பிறந்தநாள் வருது. அப்போது, பெயர்சூட்டு விழா நடத்தி, எங்கள் செல்லங்களை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்த இருக்கோம். இப்போ குழந்தைகளை பார்த்துக்குற முழு பொறுப்பும் சான்ட்ராகிட்டதான் இருக்கு. அதனாலயே தன் தொழில் விஷயங்களுக்கு இடைவெளி விட்டுட்டு முழு நேரமும் குழந்தைங்ககூடவே இருக்காங்க. விஜய் டிவியில் ‘சின்னத்தம்பி’ தொடர் முடிந்த கையோடு, நிவின்பாலி, நயன்தாரா நடிக்கும் ‘லவ் ஆக்சன் டிராமா’ படத்தில் நான் வில்லனாக நடித்து வருகிறேன். அது மலையாளம், தமிழ் என 2 மொழிகளில் உருவாகும் படம். இன்னொரு முக்கிய விஷயம்.. ‘சின்னத்தம்பி 2’ சீரியலுக்கு சீக்கிரமே ஷூட் போகப்போகிறோம்.

இவ்வாறு பிரஜன் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close