[X] Close

விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’: காலை 8 மணி காட்சி ரத்து


8

  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 10:48 am
  • அ+ அ-

இன்று ரிலீஸாகவிருந்த ‘சிந்துபாத்’ படத்தின் காலை 8 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் எஸ்.யு.அருண் குமார். இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம், கடந்த மே 16-ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மே 17-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘Mr. லோக்கல்’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால், ‘ரெமோ’ - ‘றெக்க’ மோதலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தீடீரென விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனால், விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாயினர். பிறகு, ஜூன் 21-ம் தேதி ‘சிந்துபாத்’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாகக் கடந்த வாரமும் படம் ரிலீஸாகவில்லை.

பிறகு, இன்று (ஜூன் 27) படம் ரிலீஸாகும் என அறிவித்து, படத்தை விளம்பரப்படுத்தினர். இன்று காலை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி சினிமாவில், காலை 8 மணிக்குப் படம் திரையிடப்படும் எனக் கூறப்பட்டது. எனவே, முதல் காட்சி பார்ப்பதற்காக விஜய் சேதுபதி ரசிகர்கள் காலையிலேயே ரோகிணி தியேட்டருக்குச் சென்றனர்.

ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக 8 மணி காட்சி ரத்து என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், காலை 11 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், காலை 8 மணி காட்சி பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close