[X] Close

சக்தியின் தாய்!


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:35 am
  • அ+ அ-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நெடுந்தொடர் ‘மவுன ராகம்’. இதில், கார்த்திக் கிருஷ்ணாதான் தனது தந்தை என்று தெரிந்தும், சக்தி அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். கடந்த பல வாரங்களாக ஒளிபரப்பான அத்தியாயங்களில் இவ்வாறு காட்சிகள் நகர்ந்தன. இந்நிலையில், தாங்கள் இருவரும் தந்தை – மகள் என்று தெரியவந்ததும் கார்த்திக் கிருஷ்ணா - சக்தி இடையே பாச உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.   

இதற்கிடையில், சக்தியின் தாய் உயிரோடு இருப்பதும் இவர்களுக்கு தெரியவருகிறது.  இனி தந்தை, தாய், மகள் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இவர்கள் மூவரும் இணைவது வில்லி காதம்பரிக்கு தெரியவந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்கள் மத்தியில் உள்ளது. இப்படி திடீர் திருப்பங்களும், குடும்ப உறவுகளின்  உணர்வுபூர்வமான பாசப் போராட்டமும் இனிவரும் வாரங்களில் இடம்பெறும் என்று சேனல் தரப்பு தெரிவிக்கிறது. 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close