[X] Close

அன்புக் கட்டளையும் ‘அம்மா’ என்ற பொறுப்பும்- தொகுப்பாளினி அஞ்சனா நேர்காணல்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:38 am
  • அ+ அ-

-மஹா

ஜீ தமிழ் சேனலில் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0’, புதுயுகம் சேனலில் ‘நட்சத்திர ஜன்னல்’ என ஆரவாரமாக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார் தொகுப்பாளினி அஞ்சனா. மகன் ருத்ராக்‌ஷின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு உற்சாகமாக தயாராகி வந்த அவருடன் ஒரு நேர்காணல்..

l சிறிய இடைவெளிக்குப் பிறகான இந்த சின்னத்திரை பயணம் குறித்து..

திரும்ப சேனலுக்குள்ளே வரலாமா, வேண்டாமா? என்ற குழப்பம் இருந்தது. ‘‘வீட்டுக்குள்ளேயே இருந்தா மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும். அதனால, திரும்பவும் வேலைக்குப் போ’’ என கணவர் சந்திரன்தான் விடாப்பிடியாக கூறினார். பையனுக்கு ஒரு வயது நெருங்குற இந்த நேரத்துலயே வேலைக்கு போக ஆரம் பித்தால், வளர வளர அதை இயல்பாக புரிஞ்சுக்குவான் என்றும் சொன்னார். அஞ்சனா ரிட்டர்ன்ஸ் அவதாரத்துக்கு அவரது அன்புக் கட்டளையே காரணம்.

l சீரியல், சினிமா என கவனம் செலுத்தாமல், திரும்பவும் தொகுப்பாளினி ஆனது ஏன்?

சினிமா, சீரியல் நடிப்பு வேண்டவே வேண்டாம் என்பது சின்ன வயதில் நான் எடுத்த முடிவு. அதில் இப்பவும் உறுதியா இருக்கேன்.

l மியூசிக் சேனல் வழியே திரைப்பட பாடல்களை வழங்குவது உங்கள் சிறப்பு அம்சம். அதுபோன்ற நிகழ்ச்சிகளில் உங்களை இனி எப்போது பார்க்கலாம்?

கல்யாணத்துக்கு பிறகு சன் மியூசிக்கில்  கொஞ்ச நாட்கள் மியூசிக் ஷோ வழங்கினேன். முழுக்க இளைஞர்களுக்கான தளமான அங்கு, திருமணத்துக்கு பிறகுஇருப்பதையே ரொம்ப மெச்சூர்டா உணர்ந்தேன். இப்போ அம்மா என்ற பொறுப்புக்கும் வந்துட்டேன். அதனால், அதற்கேற்ற நிகழ்ச்சிகளை எடுத்துக்கிட்டேன். 

ஒரு குழந்தைக்கு அம்மாவா இப்போ நான் இருக்குற சூழல்ல,  ஜீ தமிழ், புதுயுகம் சேனல்களில் மாசத்துக்கு ஏழெட்டு நாள்தான் வேலை பார்க்கிறேன். தவிர, சிறிய இடைவெளிக்குப் பிறகு வரும்போது புதுசா, வித்தியாசமா ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. அதுக்கான சரியான களங்கள் ஜீ தமிழ், புதுயுகம்தான் என்று நினைக்கிறேன்.

l குழந்தையை எப்படி கவனித்துக்கொள்கிறீர்கள்?

நிகழ்ச்சிகளுக்கு போகும்போது, குழந்தை ருத்ராக்‌ஷ் கூடவே இருக்கான். என்னைப் போலவே, அவனும் சேனல்களில் நிறைய ஃப்ரெண்ட்ஸ் பிடிக்க ஆரம்பிச்சிட்டான். விரைவில் அவனது முதல் பிறந்தநாள்

வருது. காதுகுத்து, சில சம்பிரதாயங்கள் என குடும்ப வழக்கப்படி எளிமையா கொண்டாடப் போறோம்.

l புதிய நிகழ்ச்சிகளில் பணியாற்றும் அனுபவம்..

குழந்தைகள் இவ்வளவு திறமைசாலிகளா என ஆச்சரியப்பட வைத்த நிகழ்ச்சி ஜீ தமிழ் - ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0. அதேபோல, நடிகை சங்கீதா போல முக்கியமானவங்க வழங்கிய புதுயுகம் - ‘நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி, இப்போ என் கைக்கு வந்திருக்கு. முக்கிய பிரமுகர்களை நேர்காணல் செய்வது, எனது ஃபேவரிட்டான விஷயம். அது மூலமாக நிறைய சாதிக்கலாம் என்று நம்பிக்கையோட ஓடிட்டிருக்கேன்!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close