[X] Close

நடிகர் சங்கத் தேர்தல் குறித்து விஜயகாந்த் என்ன கூறினார்?- பாக்யராஜ் விளக்கம்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 18:20 pm
  • அ+ அ-

நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு கோரிய போது விஜயகாந்த் என்ன கூறினார் என்பது குறித்து பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

 

2019 - 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

 

பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பொருளாளராக பிரசாந்த் போட்டியிடுகிறார். தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியராகப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் பாக்யராஜ் தலைமயிலான அணிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். இதுகுறித்து விளக்கமளித்த பாக்யராஜ், ''கையைப் பிடித்துக் கொண்டு, கண்டிப்பாக நீங்கள்தான் ஜெயிப்பீர்கள் என்று விஜயகாந்த் தெளிவாகக் கூறினார். அவரே இவ்வாறு கூறியது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. ரியாஸ் குறித்துப் பேச ஆரம்பித்த உடனே,டைமண்ட் பாபு, சிங்காரவேலன், பாபு எங்கே என்று தெளிவாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என்று கூறித்தான் வாக்கு கேட்கிறோம். நாடகக் கலைஞர்களைப் பார்க்கப் போகும்போது தேவையான உதவிகளைச் செய்வோம் என்று கூறிவிட்டு வந்திருக்கிறோம்.

 

இதை ஓட்டுக்குப் பணம் என்று அரசியலாக்கக் கூடாது. நடிகர் சங்கத்துக்கான கட்டிடத்தில் பாண்டவர் அணியினர் முழு கவனம் செலுத்தவில்லை'' என்றார் பாக்யராஜ்.

 

இதுதொடர்பாக ஐசரி கணேஷ் கூறும்போது, ''நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு இருக்கிறது என்று ராதாரவி தெரிவித்துள்ளார். எங்களுக்கு எல்லோரின் ஆதரவும் உள்ளது. விஜயகாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நடிகர்களின் சங்கத்தில் அரசியல் கிடையாது'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close