[X] Close

சூர்யா படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவா? - படத்தரப்பு மறுப்பு


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 13:10 pm
  • அ+ அ-

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' திரைப்படத்தி பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவில்லை என்று படத்தரப்பு தெரிவித்துள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெய்மெண்ட் நிறுவனமும், சிக்யா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து 'சூரரைப் போற்று' திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் இரண்டாவது நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வந்தன.

ஆனால் அவர் படத்தில் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை என்றும், அவரை அணுகக்கூட இல்லை என்றும் இயக்குநர் தரப்பு தெரிவித்துள்ளது. 'சர்வம் தாள மயம்' படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறே இந்தப் படம் என்று கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே தமிழில் 'முகமூடி' திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் அவர் தமிழில் இதுவரை நடிக்கவில்லை. தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் வெளியான மகேஷ் பாபுவின் 'மஹரிஷி' திரைப்படத்தில்  இவர் தான் நாயகி. தற்போது அல்லு அர்ஜுன் - த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தியில் 'ஹவுஸ்ஃபுல் 4' படத்தில் நடித்து வருகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close