[X] Close

வாழ்க்கை முழுவதும் நடிகனாக முயற்சி செய்துகொண்டே இருப்பேன்!- ‘சிந்துபாத்’ விஜய்சேதுபதி நேர்காணல்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:44 am
  • அ+ அ-

-சந்திப்பு : மகராசன் மோகன்

எனக்கு காது கம்மியாக கேட்குற சுபாவம். என்னோட மனைவியோ சத்தமாக பேசக் கூடியவங்க. இந்த மாதிரி நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கையில திடீர்னு என் மனைவியை ஒரு கும்பல் கடல் கடந்து கடத்திட்டு போய்டுறாங்க. எனக்கு அவங்க கொடுத்த கெடு 36 மணி நேரம். நானும் என் மகனும் அவங்களைத் தேடி புறப்படுவோம். எதிராளி கொடுத்த அந்த நேரத்துக்குள்ள எப்படி என் மனைவியை மீட்டுக்கொண்டு வர்றோம் என்பதுதான் கதை! ‘சிந்துபாத்’ படத்தின் கதைச் சுருக்கத்தை விவரித்தவாறே நேர்காணலுக்கு தயாரானார் விஜய்சேதுபதி.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் எஸ்.யூ.அருண்குமாருடன் இணைகிறார், விஜய்சேதுபதி. இப்படத்தில் அவரது மகன் சூர்யா அவரது மகனாகவே நடிக்கிறார். மனைவி கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருக்கிறார். இனி தொடர்ந்து அவருடன் நடந்த உரையாடல்…

மூன்றாவது முறையாக ஒரே இயக்குநரோடு பயணிக்கும் அனு பவம் எப்படி?

அருண் என் குடும்பத்துல ஒருத் தன். நானும், அவனும் சேர்ந்து ‘பண்ணையாரும் பத்மினி’யும் உரு வாக்கினபோது அதை ரசனை யோடு செய்தோம். அடுத்து நீ வேற யார்கூடயாவது படம் பண் ணுடான்னு சொல்லிட்டேன். அவ னும் போய்ப்பார்த்தான். எதுவும் செட் ஆகல. திரும்பவும் ‘சேது பதி’ செய்தோம். பெரிய ஹிட். அது முடிந்ததும் நானே சில ஹீரோக்களிடம், ‘இவன் பிர மாதமா படம் பண்ணுவான்’னு சொல்லி அனுப்பினேன். அப்பவும் எதுவும் நடக்கல. சரி வாடா... என்ன நடக்குதோ நடக்கட்டும்னு இப்பவும் இணைந்தாச்சு. எங்க ளோட நட்புக் கதை வேறு. ஒரு ஃபிலிம்மேக்கரா அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தை யும் அவன் ரொம்ப வித்தியாசமாக செய்திருக்கான். அது உங்களுக் கும் தெரிய வரும்.

கதைக்குள் உங்கள் மகன் சூர்யா வந்தது எப்படி?

இந்தப் படத்துல நான் இருக் கேனோ இல்லையோ மகன் கதா பாத்திரத்துல சூர்யா இருக்கான் என்பதை அருண் கதை எழுதினப் பவே முடிவு செய்து வைத்திருந் தான். சூர்யா நடிக்கணும்னு என் கிட்ட கேட்டான். குழந்தைகளோட முடிவும், ரசனையும் அவங்களோட தாக இருக்கணும்னு நினைக்கிற ஆள் நான். இந்த விஷயத்தையும் அவன் கையிலதான் கொடுத்தேன். ஆரம்பத்துல, ‘சரிவராதுப்பா’ன்னு சொல்லிட்டான். அப்பறம் ஒரு கட்டத் துல அவனே ஓ.கே சொன்னான்.

அப்பா மகன் இணைந்து நடிக் கும்போது இருந்த உணர்வு பற்றி?

சூர்யா என்னோட விதை. இந்தப் படத்துக்காக 2 மாதங்கள் அவன் என்கூடவே இருந்திருக்கான். நிறைய திட்டு வாங்கியிருக்கான். சில நேரத்துல ‘வேலைக்கு உண்டான மரியாதையை கொடுடா?’ன்னு அடிக்க போயிருக் கேன். இந்தப் படம் வழியே நல்ல அடையாளம் கிடைத்தால் இந்த உலகம் உன்னை நடிகனாக முத் திரை குத்தி ஒரு மாதிரி பார்க்கும். அந்த இடத்தில் நீ சிந்திக்கணும்னு சொல்லியிருக்கேன். வாழ்க் கையை படிக்க சொல்வதுதான் ஒரு தகப்பனின் வேலைன்னு நான் நம்புறேன்.

உங்கள் மகளும் நடிக்க வந்துட் டாங்களாமே?

‘சங்கத்தமிழன்’ படத்துல நடிக் கிறாங்க. அவங்க நடிக்க வந்ததுக் கும் ஒரு காரணம் இருக்கு. பையன் நடிக்கிறான். அது பெண் பிள்ளைக்கு தெரியும். பிஞ்சு மனசு. ஒரு தகப்பனாக அந்த குழந்தைக்கு ‘அண்ணன் நடிக்கிறான். நாம இல்லையே?’ன்னு அந்த ஏக்கம் இருந்துடங்கூடாதுன்னு தோணுச்சு. அதான் கேட்டேன். ஒரு வீட்டுக் குள்ள ஐந்தாறு குழந்தைங்க இருப்பாங்க. அந்த குழந்தைகளில் ஒருவராக என் மகளும் ‘சங் கத்தமிழன்’ படத்தில் நடிக் கிறாங்க.

விஜய்சேதுபதி ஒரு பண்பட்ட நடிகர் என்பதை சமீபத்திய மேடைப் பேச்சுகளிலும் பார்க்க முடிகிறதே?

அப்படி எதுவுமே இல்லை. இன்னைக்கும் ஒவ்வொரு படத்துல நடிக்கும்போதும் அவ்ளோ கஷ் டப் படுறேன். காளிமுத்துவின் மகன் இந்த விஜய்சேதுபதியா வந்த மாதிரி எனக்கு பின்னாடி வர்ற நடிப்பு தலைமுறைகள் என் னோட நடிப்பைப் பார்க்கும்போது அது அவங்களுக்கு ஒரு ரசனையா இருக்கணும்னு தொடர்ந்து முயற்சியில இருக்கேன்.

ஒரு கதை என்கிட்ட வந்தால் அதுல என்னை நான் எவ்ளோ இன் வெஸ்ட்மென்ட் (முதலீடு)பண்ண முடியும்னு பார்க்கிறேன். அந்த இன்வெஸ்ட்மென்ட்தான் ஒரு பொம் மைக்கு உயிர் கொடுக்கும்னு நம்பு கிறேன். அதனாலதான் இப்பவும் சொல்கிறேன் ஒவ்வொரு படத்து லயும் நான் நடிகனாக முயற்சி செய்து கொண்டேயிருக்கிறேன். இந்த வாழ்க்கை முழுவதும் அதை செய்வேன். அதுதான் உண்மை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close