[X] Close

ஒரு மேதை, ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார்: கிரேசி மோகனுக்கு குஷ்பு புகழாஞ்சலி


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 16:53 pm
  • அ+ அ-

ஒரு மேதை, ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார் என மறைந்த கிரேசி மோகனுக்குப் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கியவர் கிரேசி மோகன். ‘மாது மிரண்டால்’, ‘சாட்டிலைட் சாமியார்’, ‘சாக்லேட் கிருஷ்ணா’, ‘மதில் மேல் மாது’ உள்ளிட்ட 5000-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நாடகங்களில் முத்திரை பதித்தவர்.

‘சதிலீலாவதி’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘காதலா காதலா’, ‘அருணாச்சலம்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘தெனாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிரேசி மோகனின் மறைவு, திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“கிரேசி மோகனின் மறைவு குறித்த செய்தி இப்போதுதான் கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்கவில்லை. ஒரு மேதை, ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என ட்விட்டரில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார் குஷ்பு.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close