[X] Close

இளைஞர் பட்டாளத்துடன் களமிறங்கும் ‘தளபதி 64’


64

  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 11:21 am
  • அ+ அ-

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 64’ படம், இளைஞர் பட்டாளத்துடன் களமிறங்குகிறது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ‘தளபதி 64’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ படங்களை இயக்கியவர் இவர். இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே இந்தப் படம் வித்தியாசமாக அமையும் என்கின்றனர்.

பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பணிபுரியவுள்ளனர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் படத்துக்காக 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.

ஆக்‌ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகும் எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘கத்தி’ படத்துக்கு இவர்தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான இவர், ‘முகமூடி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘யாத்ரா’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கைதி’ படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அத்துடன், இந்தப் படத்தின் எடிட்டராக பிலோமின்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ படங்களுக்கு இவர்தான் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளத்துடன் களமிறங்கக் காத்திருக்கிறது ‘தளபதி 64’ படக்குழு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close