[X] Close

விஜய்யின் ‘தளபதி 63’: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த அப்டேட்


63

  • kamadenu
  • Posted: 05 Jun, 2019 12:35 pm
  • அ+ அ-

விஜய்யின் ‘தளபதி 63’ படம் குறித்து அப்டேட் தந்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்துவிடாதவாறு படக்குழு பல கட்டுப்பாடுகளை விதித்தாலும், அவ்வப்போது பல விஷயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, அதிகாரபூர்வமாகவும் அவ்வப்போது பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தைப் பற்றி ஒரு அப்டேட் தந்துள்ளார். ‘தளபதி 63’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்த 2 பாடல்கள் படம்பிடிக்கப்பட்டு, எடிட் செய்ததும் அவருக்குப் போட்டுக் காண்பித்துள்ளார் அட்லீ.

தன்னுடைய ஸ்டுடியோவில் அட்லீ அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “யார் இங்கிருக்கிறார் என்று பாருங்கள். எடிட் செய்யப்பட்ட இரண்டு பாடல்களை முதன்முதலில் நான் தான் பார்த்தேன்” என ட்வீட் செய்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close