[X] Close

இசைக்கலைஞர்களுக்கு சொந்த செலவில் கட்டிடம்: இளையராஜா அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 18:35 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

இசைக்கலைஞர்களுக்கு சொந்த செலவில் கட்டிடம் கட்டித்தரவுள்ளதாக இசையமைப்பாளர்  இளையராஜா அறிவித்துள்ளார்

நேற்று (ஜூன் 2) இளையராஜாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாலையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பல முன்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக, நேற்று (ஜூன் 2) காலை செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, “எனது பிறந்த நாளை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து சொன்னார்கள். நேரிலும் வந்து வாழ்த்து சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மாலையில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், உங்களுக்கு ஓர் முக்கியமான அறிவிப்பு காத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

உடனடியாக என்ன அறிவிப்பாக இருக்கும் என்று இசை ரசிகர்கள் கணிக்கத் தொடங்கினார்கள். அதன்படி மாலை தனது இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டிடத்தை தன் சொந்த செலவில் கட்டித்தர இருப்பதாக அறிவித்தார் இளையராஜா. மேலும் அந்தக் கட்டிடம் எப்படியிருக்கும் என்பதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டார்.

அடுத்தகட்டமாக தன்னுடைய இசையால் சிகிச்சை  மற்றும் பாடத்திட்டங்கள் உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களிலும் இளையராஜா கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close