[X] Close

சூர்யாவின் க்ளாஸ் + மாஸ் நடிப்பின் அற்புதக் கலவை: இயக்குநர் எச்.வினோத்


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 17:02 pm
  • அ+ அ-

‘என்.ஜி.கே’ படத்தின் சூர்யாவின் நடிப்பு, க்ளாஸ் + மாஸ் சேர்ந்த அற்புதக் கலவையாக இருந்தது என இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மே 31-ம் தேதி வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சூர்யா உள்ளிட்ட ‘என்.ஜி.கே.’ படக்குழுவினரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் எச்.வினோத்.

“ ‘என்.ஜி.கே.’, சூர்யாவிடமிருந்து க்ளாஸ் + மாஸ் நடிப்பின் அற்புதக் கலவை. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய நடிப்பு, படத்தை அற்புதமாக்கியுள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார் எச்.வினோத்.

அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கியுள்ளார் எச்.வினோத். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் இது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close