[X] Close

சூர்யாவின் நடிப்பு அட்டகாசம்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 13:26 pm
  • அ+ அ-

‘என்.ஜி.கே.’ படத்தில் சூர்யாவின் நடிப்பு அட்டகாசம் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மே 31-ம் தேதி வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘என்.ஜி.கே.’ படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

“ ‘என்.ஜி.கே.’, அற்புதமான நடிகர்களோடு நன்றாக இருந்தது. முக்கியமாக, சூர்யாவின் நடிப்பு அட்டகாசம். ஒவ்வொரு முறையும் ‘என்.ஜி.கே.’ திரையில் வரும்போதும், என்னைக் கவர்ந்து இழுத்துவிட்டார். பிரபு சார், செல்வா சார், யுவன் சார்... வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக, விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். பிவி கம்பைன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், விஜய்யின் 64-வது படமாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close