[X] Close

மகேஷ் பாபு புதிய படத்தின் தலைப்பு ‘சரிலேரு நீக்கெவரு’


  • kamadenu
  • Posted: 31 May, 2019 15:47 pm
  • அ+ அ-

மகேஷ் பாபுவின் 26-வது படத்துக்கு ‘சரிலேரு நீக்கெவரு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 9-ம் தேதி ரிலீஸான தெலுங்குப் படம் ‘மஹரிஷி’. வம்சி இயக்கிய இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, அல்லரி நரேஷ், பிரகாஷ் ராஜ் என நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே இந்தப் படம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், முதல் 4 நாட்களிலேயே அந்தத் தொகையை வசூலித்துவிட்டது. மகேஷ் பாபுவின் 25-வது படம் இது.

இந்நிலையில், தன் தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார் மகேஷ் பாபு. அவரின் 26-வது படத்துக்கு ‘சரிலேரு நீக்கெவரு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘உனக்கு நிகரானவர்கள் யாருமில்லை’ என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்தப் படத்தை, அனில் ரவிபுடி இயக்குகிறார். அனில் சுங்கரா, தில் ராஜு மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் (2020) சங்கராந்தி பண்டிகைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடிக்கிறார். மகேஷ் பாபு வெளியிட்ட போஸ்டரை ரீ ட்வீட் செய்துள்ள ராஷ்மிகா, “உங்களில் பலரும் இதைத்தான் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆம்! நான் இந்தப் பிரமாதமான குழுவில் ஓர் அங்கம்தான்.

இது எனக்குப் பெரும் உற்சாகக் கொந்தளிப்பைத் தருகிறது. அனில்ரவிபுடி, மகேஷ் பாபு, தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட குழுவினருடன் பணியாற்ற இருப்பதில் பெரிய அளவில் உத்வேகம் அடைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close