[X] Close

கார்த்தி ஜோடியாக நிகிலா விமல்?


  • kamadenu
  • Posted: 17 May, 2019 16:18 pm
  • அ+ அ-

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில், தற்போது நிகிலா விமலும் இணைந்துள்ளார்.

‘பாபநாசம்’ படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது தமிழ்ப் படத்தைத் தற்போது இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர்.

அக்கா - தம்பியாக ஜோதிகா - கார்த்தி நடிக்க, அவர்களுடைய அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த அம்மு அபிராமி, இரண்டாவது முறையாக கார்த்தி படத்தில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். வயாகாம் 18 நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது ஊட்டியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நிகிலா விமல் இணைந்துள்ளார். இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் நிகிலா விமலுடன் சேர்ந்து எடுத்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்தி. ஒருவேளை, கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

வருகிற அக்டோபர் மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close