[X] Close

‘டுலெட்’ இயக்குநர் படத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷ்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 15:34 pm
  • அ+ அ-

‘டுலெட்’ படத்தை இயக்கிய செழியனின் அடுத்த படத்தில், மிஷ்கின் மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கிய படம் ‘டுலெட்’ (Tolet). கடந்த பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டுலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் நாயகன் - நாயகி என்றெல்லாம் கிடையாது. செழியனின் உதவியாளர் சந்தோஷும், நாட்டியக் கலைஞரான ஷீலாவும், தருண் என்ற சிறுவனும் இந்தப் படத்தில் நடித்தனர்.

பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், நாடகக் கலைஞர் ஆதிரா, எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோர் நடிப்பில் இந்தப் படத்துக்குப் பங்களிப்பு செய்தனர்.

2017-ம் ஆண்டு கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அத்துடன், 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. மேலும்,  ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ஆல் லைட்ஸ் இண்டியா இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்’ 2018-ம் ஆண்டின் சிறந்த இந்தியப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.

chezhian-2jpg.jpg 

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்முரமாகி இருக்கிறார் செழியன். இந்தப் படத்தில், இயக்குநர் மிஷ்கின் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராக இருந்ததோடு, படத்திலும் நடித்த மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்திலும் நடித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close