[X] Close

கமல்ஹாசனுக்கு இதைவிட சூப்பர் பிரச்சாரம் அமையுமா? - கஸ்தூரி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 12:48 pm
  • அ+ அ-

‘கமலுக்கு இதைவிட சூப்பர் பிரச்சாரம் அமையுமா? 4 தொகுதிகளிலும் நினைச்சதைவிட அதிகமாகவே ஓட்டு வாங்குவார்’ எனத் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

கமலின் இந்தப் பேச்சு, சர்ச்சையானது. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இருந்தாலும் தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்காத கமல்ஹாசன், கடந்த 15-ம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சக்திவேலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், “நான் அரவக்குறிச்சியில் பேசியதற்காக என் மீது கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும்” என்றார் கமல்.

இந்நிலையில், ‘கமல்ஹாசனுக்கு இதைவிட சூப்பர் பிரச்சாரம் அமையுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கமல் 30 விநாடிகள் பேசியதை 3 நாட்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோமே... பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியவர்கள், இப்போது கமல் பேசியதை நாடு முழுவதும் பிரபலப்படுத்திவிட்டனர்.

இதைவிட சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? நான் நினைக்கிறேன், 4 தொகுதிகளிலும் நினைத்ததைவிட அதிகமாகவே ஓட்டு வாங்குவார் பாருங்க...” எனத் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close