[X] Close

ஆர்யாவின் ‘மகாமுனி’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 12:31 pm
  • அ+ அ-

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘மகாமுனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாந்தகுமார். அருள்நிதி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், இனியா ஹீரோயினாக நடித்தார். ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், உமா ரியாஸ்கான், மதுசுதன் ராவ், காளி வெங்கட், காஜல் பசுபதி, ஆடுகளம் முருகதாஸ், சுஜாதா விஜயகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தை, இந்தியில் ‘அகிரா’ என்ற பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் ரீமேக் செய்தார்.

இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார் சாந்தகுமார். இந்தப் படத்துக்கு ‘மகாமுனி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் இன்று (மே 17) ரிலீஸாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் இதன் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

magamuni 1.jpg 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close