[X] Close

புதிய பேட்மேன் ஆகிறார் 'Twilight' ஹீரோ


twilight

  • kamadenu
  • Posted: 17 May, 2019 11:19 am
  • அ+ அ-

Twilight படங்களில் கதாநாயகனாக நடித்த ராபர்ட் பேட்டின்சன் அடுத்த பேட்மேன் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் பேட்மேன். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இந்த கதாபாத்திரம் திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது. 1940 முதல் திரையில் வலம் வரத் தொடங்கிய பேட்மேன் கதாபாத்திரம் 2005ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'Batman Begins'படத்தின் மூலம் புத்துயிர் பெற்றது.

அதன் பிறகு 2008ல் வெளியான 'The Dark Knight' படம் பேட்மேன் கதாபாத்திரத்தை புகழின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றது. இந்த படத்தின் வில்லனான நடித்த ஜோக்கர் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2012ஆம் ஆண்டு 'The Dark Knight Rises' படம் வெளியானது. இந்த 3 படங்களிலும் க்ரிஸ்டியன் பேல் பேட்மேனாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பேட்மேன் படங்களை இயக்கும் பொறுப்பை ஜாக் ஸ்னைடரிடம் டிசி நிறுவனம் ஒப்படைத்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய  Batman v Superman: Dawn of Justice,  Justice League ஆகிய படங்களில் பென் அஃப்லெக் பேட்மேனாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தராததால் பேட்மேன் படங்களை இயக்கும் பொறுப்பை டிசி காமிக்ஸ் நிறுவனம் தற்போது ‘planet of apes' படங்களை இயக்கிய மேட் ரீவ்ஸ்-இடம் ஒப்படைத்துள்ளது.

அந்த வகையில் 2021ஆம் வெளியாகவுள்ள புதிய பேட்மேன் படத்தில் 'Twilight’ படங்களில் நாயகனாக நடித்த ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கான பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close