[X] Close

மறைமுகமாக கமலை சாடும் தயாரிப்பாளர் சி.வி.குமார்


  • kamadenu
  • Posted: 17 May, 2019 10:16 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

காந்தியை சுட்டுக்கொன்ற சம்பவத்தை அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டுப் பேசினார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்று கமல் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம்தான் என கமல் பேசியதாகவும்,  சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் இதுபோன்று பேசியதாக இந்துத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்தச் சர்ச்சை இன்னும் கமலைச் சுற்றியே வருகிறது. கமல் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவர்மீது முட்டை, காலணிகள் வீசப்பட்டன.

இந்நிலையில் கமலை மறைமுகமாக விமர்சித்துள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே ... ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா.” என்று தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close