[X] Close

மாற்றுக்களம்: ஆஸ்கர் செல்லும் ‘கமலி’


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:01 am
  • அ+ அ-

-ம.சுசித்ரா

“நிறையப் பேர் பார்த்துட்டுச் சொல்லுவாங்க… அவளோட கால் உடைஞ்சிறிச்சினா யாரு கல்யாணம் பண்ணுவாங்கனு” என்ற சுகந்தியின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது.

அப்போது அவருடைய ஒன்பது வயது மகள் கமலி அந்தரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் ஸ்கேட்டிங் பலகையில் இருந்து தவறி விழுகிறார். அசராமல் துள்ளிக்குதித்து எழுந்து மீண்டும் விளையாட்டைத் தொடருகிறார். இது ‘கமலி’ ஆவணப்படத்தின் ஒரு காட்சி.

வீதிகளில் மட்டுமல்ல; ஆர்ப்பரிக்கும் கடலிலும் ஸ்கேட்டிங் விளையாடும் மாமல்லபுரத்தின் ஒரே பெண் ஸ்கேட்டிங் வீராங்கனை கமலி. கடந்த மூன்றாண்டுகளில் இவர் நாடு முழுவதும் நடைபெற்ற பல ஸ்கேட்டிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

அனாயாசமாகச் சறுக்கி, சுழன்று, காற்றில் பறந்து லாவகமாகத் தரையிறங்கும் கமலியை மாமல்லபுரத்தில் கண்டு ஆச்சரியப்படாத சுற்றுலா பயணிகள் கிடையாது.

கமலியின் உலகத்தை அவளுடைய தாயின் பார்வையிலிருந்து ஆவணப்படமாகப் பதிவுசெய்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் சாஷா ரெயின்போ. ஆணாதிக்கச் சமூகத்தின் இரும்புப் பிடியில்

இருந்து தன்னுடைய மகளை விடுவிப்பதற்கான சுதந்திர வெளியாகவே ஸ்கேட்டிங் பலகையைக் காண்கிறார் கமலியின் தாய். ஸ்கேட்டிங் பலகையின் மேல் பறவைபோலச் சிறகடித்துப் பறக்கும் தன் மகளைப் பார்த்துப் பூரித்து, அவள் வழியாகத் தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒரு தாயின் மனவெழுச்சியாக ‘கமலி’ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் சாஷா ரெயின்போ.

2018 டிசம்பரில் நடைபெற்ற மும்பை சர்வதேசத் திரை விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற இந்தப் படம், தற்போது அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்பட விருதை வென்றிருக்கிறது. 2020-க்கான ஆஸ்கர் விருதுகளின் பட்டியலுக்கும் தேர்வாகியுள்ளது ‘கமலி’.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close