[X] Close

முத்தையா இயக்கத்தில் சிம்பு : பேச்சுவார்த்தை தொடக்கம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 18:18 pm
  • அ+ அ-

முத்தையா இயக்கத்தில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

‘குட்டிப்புலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான முத்தையா, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’, ‘தேவராட்டம்’ என இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். 5 படங்களுமே கிராமத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டவை.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தேவராட்டம்’ படத்துக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்தார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் படத்தைத் தயாரித்தது.

இந்நிலையில், முத்தையா இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. 5 படங்களையும் கிராமம் சார்ந்து எடுத்த முத்தையா, முதன்முறையாக நகரம் சார்ந்த கதையை இயக்கப் போகிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிம்பு திரும்பி வந்தபிறகு அவரிடம் கதை சொல்லப் போகிறார் முத்தையா.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்துக்காக உடல் எடையைக் குறைத்து வருகிறார். அடுத்த மாதம் (ஜூன்) இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. நரதன் இயக்கும் இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்தபிறகு முத்தையா இயக்கத்தில் சிம்பு நடிக்கலாம் எனத் தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close