[X] Close

கரடுமுரடான, புத்துணர்ச்சியான கணவன்: சயீஷா ட்வீட்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 17:13 pm
  • அ+ அ-

‘மகாமுனி’ படத்தில் ஆர்யாவின் தோற்றத்தைப் பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சயீஷா.

‘மெளன குரு’ படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கியுள்ள படம் ‘மகாமுனி’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். டட்லி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சாபு ஜோசப் எடிட்டராகப் பணிபுரிகிறார்.

கடந்த வருடம் (2018) நவம்பர் 14-ம் தேதி பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை (மே 17) இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், ‘மகாமுனி’ படத்தில் ஆர்யாவின் தோற்றத்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார், அவருடைய மனைவியும் நடிகையுமான சயீஷா. ‘மகாமுனி’ ஸ்டில்ஸ் சிலவற்றைப் பகிர்ந்துள்ள அவர், “கரடுமுரடான மற்றும் புத்துணர்ச்சியான கணவரே... ‘மகாமுனி’ படத்துக்காக என்னால் காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்யா - சயீஷா திருமணம், கடந்த மார்ச் 10-ம் தேதி நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து ‘டெடி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். சக்தி செளந்தர்ராஜன் இதை இயக்குகிறார்.

சயீஷா 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close