[X] Close

‘தளபதி 63’ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய அம்ரிதா ஐயர்


63

  • kamadenu
  • Posted: 16 May, 2019 15:05 pm
  • அ+ அ-

அட்லீ இயக்கத்தில் இன்னும் தலைப்பு வைக்காத படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜாக்கி ஷெராஃப், கதிர், ரெபா மோனிகா ஜான், இந்துஜா, விவேக், வர்ஷா பொல்லம்மா, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், கு.ஞானசம்பந்தம் என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, அந்த அணியின் தலைவியாக இந்துஜா நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட மற்ற நடிகைகள் அந்த அணியில் விளையாடுபவர்களாக நடித்துள்ளனர். அதுவும் ரெபா மோனிகா ஜான், ஆஸிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான பெண்ணாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கால்பந்து அணியில் நடிகை அம்ரிதா ஐயரும் இணைந்துள்ளார். ‘படைவீரன்’ மற்றும் ‘காளி’ படங்களில் நடித்துள்ள அம்ரிதா, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான வெளியான ‘தெறி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அம்ரிதாவுக்குப் பிறந்த நாள். இதை அறிந்த விஜய், சர்ப்ரைஸாக கேக் ஆர்டர் செய்து, படப்பிடிப்பு தளத்துக்கு கொண்டுவரச் சொல்லியுள்ளார். ஷூட்டிங் முடிந்ததும் படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார் அம்ரிதா எனத் தகவல் வெளியாகியுள்ளது.

‘தளபதி 63’ படப்பிடிப்பு, சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தற்போது நடைபெற்று வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close