[X] Close

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பார்ட் 2: பேச்சுவார்த்தை தொடக்கம்


2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 16:40 pm
  • அ+ அ-

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

கோகுல் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. விஜய் சேதுபதி, அஸ்வின், நந்திதா, ஸ்வாதி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சித்தார்த் விபின் இசையமைத்ததோடு, முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்தார்.

மேலும், பசுபதி, பட்டிமன்றம் ராஜா, சூரி, டேனியல், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், லிவிங்ஸ்டன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். லியோ விஷன் மற்றும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தன.

முழுக்க முழுக்க காமெடியாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. இப்போது பார்த்தாலும் கூட வயிறு குலுங்கச் சிரிக்கும் அளவுக்கு காமெடிகளால் நிறைந்தது இப்படம். 4 கோடி ரூபாயில் தயாரான இந்தப் படம், அதைவிட 10 மடங்கு அளவு வசூலித்தது.

‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’, ‘ஃப்ரெண்டு... ஃபீல் ஆயிட்டாப்ல...’, ‘டேய்... நான் ஷுகர் ஃபேஷண்டுடா’, ‘18 வயசுக்கு கீழ இருக்குறவங்க இந்த சண்டைக்காட்சியைப் பார்க்காதீங்க’ என இந்தப் படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்தப் படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கிய ‘காஷ்மோரா’ மற்றும் ‘ஜுங்கா’ படங்கள் சரியாகப் போகவில்லை.

இந்நிலையில், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அது உண்மையாகும் பட்சத்தில், ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close