[X] Close

‘களவாணி 2’ பிரச்சினை முடிவுக்கு வந்தது: விரைவில் ரிலீஸ்


2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 13:18 pm
  • அ+ அ-

‘களவாணி 2’ பிரச்சினை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். சற்குணமே படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில்,  ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘களவாணி 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் 10-ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்தார்.

ஆனால், ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தனக்குத் தெரியாது என இயக்குநர் சற்குணம் தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தில் போதுமான ஆவணங்களைச் சமர்ப்பித்து, தன் மீதான தடையைத் தகர்த்தெறிந்தார். ஆனாலும், படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

எனவே, கடந்த 9-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் சற்குணம். அதில், “விமலுக்கும், சிங்கார வேலனுக்கும் இடையில் இருக்கும் பணப்பிரச்சினையால், ‘களவாணி 2’ படத்தை விமல் தயாரித்தது போல் போலி ஆவணங்களைத் தயார்செய்து நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றுள்ளார் சிங்கார வேலன்.

இதனால், ‘களவாணி 2’ படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவப்பெயரையும் உண்டாக்கியுள்ளது. எனவே, சிங்கார வேலன் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படம் பாதுகாப்புடன் வெளிவருவதையும் உறுதிசெய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘களவாணி 2’ பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக சிங்கார வேலன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கார வேலனுக்கு விமல் தரவேண்டிய பணத்துக்குப் பதிலாக, இந்த ஆண்டுக்குள் இரண்டு படங்களில் நடித்துத் தருவதாக விமல் உத்தரவாதக் கடிதம் கொடுத்ததைத் தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்கார வேலன் தெரிவித்துள்ளார்.

எனவே, விரைவில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

vimal.jpg 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close