[X] Close

மக்களை இலவச பழக்கத்திற்கு தள்ளிவிட்டது அரசு: இயக்குநர் சேரன் சாடல்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:16 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

மக்களை இலவச பழக்கத்திற்கு தள்ளிவிட்டது அரசு என்று ‘திருமணம்: சில திருத்தங்களுடன்’ படத்துக்கு வரவேற்பு கிடைக்காதது குறித்து இயக்குநர் சேரன் சாடியுள்ளார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கி, நடித்த படம் ‘திருமணம்: சில திருத்தங்களுடன்’. உமாபதி ராமையா, தம்பி ராமையா, காவ்யா சுரேஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஜெயப்பிரகாஷ், பால சரவணன், அனுபமா குமார் ஆகியோர்  நடித்த இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காதது காரணம் என்று தகவல் வெளியானது. இதனால் மறுபடியும் வெளியிட திட்டமிட்டது. ஆனால் அதுவும் சாத்தியப்படவில்லை.

இந்நிலையில், 'திருமணம்: சில திருத்தங்களுடன்' படத்தின் விமர்சனம் எழுதி ட்விட்டரில் இயக்குநர் சேரனின் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டார். இதற்கு இயக்குநர் சேரன், “பாராட்டுக்கள் சரி. ஆனால் பொருளாதார ரீதியாக வெற்றிபெறவில்லையே  இங்கே முதல் வாரம் ரசிகர்கள் வந்தால்தான் படம் எடுத்தவர்களுக்கு லாபம். ஆனால் கமர்சியல் நடிகர்களின் படங்களுக்கு முதல் ஷோ குவியும் மக்கள் நல்ல படங்களுக்கு வருவதில்லை. பின்னர் எப்படி நாங்கள் நல்லபடங்கள் தொடர்ந்து எடுப்பது” என்று பதிலளித்துள்ளார்.

”திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். முன்பு நான் நிறைய படங்கள் பார்ப்பேன். இப்போது குறைத்துவிட்டேன்” என்று இயக்குநர் சேரனுக்கு குறிப்பிட்டு கூறினார். அதற்கு “பெரிய நடிகர்கள் படத்துக்கு அந்த டிக்கெட் விலை சரியாக இருக்கலாம்.. சிறிய படங்களுக்கு விலை மாற்றப்பட்டால் நல்லதுதான்.ஆனால்  நம் மக்களுக்கு எல்லாவற்றையும் ஓசியில் பார்க்கும் வாங்கும் பழக்கம் வந்துவிட்டது. அவர்களை இந்த பழக்கத்திற்கு தள்ளியது அரசு.. எல்லாத்தையும் சும்மா கொடுத்து.” என்று தெரிவித்துள்ளார் சேரன்.

”நல்ல படங்கள் எடுப்பதோடு சேர்த்து விளம்பர யுக்தியை சரியாக கையாள வேண்டும் சார்..முந்தைய காலங்களில் பூக்கடைகளுக்கு விளம்பரம் தேவைப்படாமல் இருக்கலாம்..இப்பொழுது தேவை” என்று மற்றொருவர் தெரிவிக்க அதற்கு பதிலளிக்கும் விதமாக “பாஸ்.. 1.5 கோடி  விளம்பரத்துக்குச்  செலவு பண்ணியிருக்கு பாஸ். இதற்கு மேல பண்ண முடியாது” என்று கூறியுள்ளார் சேரன்.

”குறைந்த காசு போட்டு தரமான படம் விஜய் அண்ணாவை வைத்து பண்ணுங்க. நான் காத்திருக்கிறேன். கதை சொல்லுங்க” என்று விஜய் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு “விஜய் அண்ணாவை வைத்து கம்மி காசு.. சூப்பர் ப்ரோ” என்று பதிலளித்துள்ளார் இயக்குநர் சேரன்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close