[X] Close

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது என் தவறல்ல: சிவகார்த்திகேயன்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 18:55 pm
  • அ+ அ-

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது என் தவறல்ல, எனவே அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் வாக்களிப்பதற்காக, வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளிக்கு காலை 8 மணியளவில் மனைவியுடன் வந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை. அவர் மனைவி பெயர் மட்டுமே இருந்தது.

‘கடந்த இரண்டு தேர்தல்களிலும் இதே வாக்குச்சாவடியில்தான் வாக்களித்தேன்’ என்று சிவகார்த்திகேயன் வாதிட்டாலும், அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

பின்னர், மதியம் 2 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு, சிறப்புச்சலுகை கொடுத்து கைரேகை பதிவுசெய்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் சிவகார்த்திகேயன் வாக்களித்த விஷயம் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ‘சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

ஆனால், இந்த விஷயம் குறித்து கடைசிவரை சிவகார்த்திகேயன் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், ‘Mr. லோக்கல்’ படத்தின் புரமோஷனில் இருந்த சிவகார்த்திகேயனிடன் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

“நான் இந்தியக் குடிமகன். ஓட்டு போடுவது என்னுடைய கடமை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, ஓட்டு போட்டேன். ‘எல்லோரும் வந்து வாக்களியுங்கள்’ என்றுதான் தேர்தல் ஆணையம் சொல்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் என் தவறு இல்லையே... நீங்கள் எல்லோரும் ஓட்டு போட்டது போல்தான் நானும் போட்டேன்.

கடந்த இரண்டு தேர்தல்களில் அதே தொகுதியில்தான் வாக்களித்தேன். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பெயரைச் சரிபார்த்த போதுகூட வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்தது. எனவே, இதைப்பற்றி நான் எந்த விளக்கமும் அளிக்கத் தேவையில்லை” எனப் பதில் அளித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close