[X] Close

கமல்ஹாசன் வார்த்தைகள் முட்டாள்தனமானது: காயத்ரி ரகுராம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 16:32 pm
  • அ+ அ-

நாதுராம் கோட்சேவை மேற்கோள் காட்டி கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று (12.05.2019) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.

இந்நிலையில், கமல்ஹாசன் பேசியது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

“வேறொரு மதத்தினர் வசிக்கும் பகுதியில், இந்து மதத்தைக் குறிப்பிட்டு அவர் பேசியது ஏன்? இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தானே... தீவிரமானவர்தானே? இந்துக்களுக்கு கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா?. தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தைகள் முட்டாள்தனமானது” எனத் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் கமலின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close