[X] Close

‘தளபதி 64’ படத்தை இயக்கும் ‘மாநகரம்’ இயக்குநர்?


64

  • kamadenu
  • Posted: 13 May, 2019 16:06 pm
  • அ+ அ-

‘தளபதி 64’ படத்தை, ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகின்ற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை, ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யைச் சந்தித்து கதை சொல்லிவிட்டார் லோகேஷ் கனகராஜ். விஜய்க்கும் பிடித்துவிட்டது.

ஆனால், ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தின் வேலைகளில் ஈடுபடுவது என விஜய் தீர்மானித்திருப்பதால், ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகே விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், ‘தளபதி 64’ படத்தை விஜய்யே தயாரிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close