[X] Close

தொடரும் 'தளபதி 63' படங்கள் லீக்


63

  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:58 am
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'தளபதி 63' படப்பிடிப்பு தளத்திலிருந்து படங்கள் லீக்காகி வருவது தொடர்கதையாகி வருகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படாததால் 'தளபதி 63' என்று அழைத்து வருகிறது படக்குழு. தீபாவளி வெளியீடு என்று இப்படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படத்தின் சில முக்கிய காட்சிகளுக்காக ஃபுட்பால் ஸ்டேடியம் ஒன்றை அரங்கமாக வடிவமைத்து அதற்குள் படமாக்கினார்கள். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த வாரம் இணையத்தில் லீக்கானது. தற்போது இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோ ஃபுட்பால் உடை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதில், ரெபா மோனிகா ஜானின் முகத்தில் ஆசிட் பட்டு சிகிச்சை எடுத்திருப்பது போல் மேக்கப் போட்டுள்ளார். இது கதையில் மிக முக்கியமான திருப்பமாக இருக்கும் என கருதப்படுகிறது. திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லாமல், உடன் நடித்தவர்களே இப்படத்தை எடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக படங்கள் லீக்காகி வருவதால், இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை மீறியும் இவ்வாறு படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெரஃப்,  இந்துஜா, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close