[X] Close

'அயோக்யா' குறித்து சர்ச்சை ட்வீட்: பார்த்திபன் விளக்கம்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 16:04 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

'அயோக்யா' படம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ட்வீட்டுக்கு, தற்போது பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.

தற்போது விமர்சன ரீதியாக 'அயோக்யா'வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. திடீரென்று இன்று (மே 12) காலை தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் “'அயோக்கியா'த்த்தனம்!, 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே' படத்தை In & out லவுட்டி 'Temper' (Rights பெறாமல்) தெலுங்கில் ஹிட்டாக்கி தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு 'அ-தனம்'? குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.

இப்பதிவால் 'அயோக்யா' படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தது மட்டுமன்றி, இணையத்தில் பெரும் வைரலானது. இதனைத் தொடர்ந்து தனது ட்வீட்டுக்கான பின்னணி குறித்து பார்த்திபன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் ரசிகர்கள். 'அயோக்கியா'-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை!

'டெம்பர்'வரும்போது தெரியாது, தமிழாகும் போது தெரியும்.இதை கூடிப்பேசி கூத்தடிப்போம் ஷுட்டிங் ஸ்பாட்டில். விஷாலுக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை. இப்போதும் வழக்காட வரவில்லை. வழக்கமான என் (100%உண்மையான) அக்மார்க் அக்குறும்பே. கெட்ட போலீஸ்,ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்! இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே! சந்தேகம் என்றால் பாருங்கள்” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close