[X] Close

முன்னணி தயாரிப்பாளரான வெங்கட்ராம ரெட்டி காலமானார்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 15:34 pm
  • அ+ அ-

-ஸ்கிரீனன்

முன்னணி தயாரிப்பாளரான வெங்கட்ராம ரெட்டி காலமானார். அவருக்கு வயது 75

தமிழ் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் விஜயா வாகினி புரொடக்‌ஷன்ஸ். 1948 தொடங்கப்பட்டு இப்போது வரை பல படங்களைத் தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது. 'எங்க வீட்டுப் பிள்ளை', 'உழைப்பாளி', 'வீரம்', 'பைரவா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது.

இந்நிறுவனத்தை பி.நாகிரெட்டி மறைவுக்குப் பிறகு அவரது இளைய மகன் பி.வெங்கட்ராம ரெட்டி நிர்வாகித்து வந்தார். இவரது மேற்பார்வையில் தான் 'தாமிரபரணி' , 'படிக்காதவன்', 'வேங்கை', 'வீரம்', 'பைரவா' ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டது. அவரது 6-வது தயாரிப்பாக தற்போது விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்து வரும் 'சங்கத்தமிழன்' தயாராகி வருகிறது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த வெங்கட்ராம ரெட்டி இன்று (மே 12) மதியம் 1 மணியளவில் காலமானார். இவரது மனைவியின் பெயர் பாரதிரெட்டி. இவருக்கு ராஜேஷ்ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி மற்றும் அர்ச்சனா ரெட்டி என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.

இவரது இறுதிச் சடங்குகள் நாளை (மே 13) காலை 7:30 மணியிலிருந்து 9 மணிக்குள் நெசப்பாக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close