[X] Close

திரை விமர்சனம்: கீ


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:45 am
  • அ+ அ-

கல்லூரி மாணவரான ஜீவாவுக்கு, ஸ்மார்ட்போனை ஹேக் செய் வது என்றால் அல்வா சாப்பிடு வது மாதிரி. பெண்களின் கவ னத்தை ஈர்ப்பதற்காக அவர்களது செல் போனை ஹேக் செய்து விளையாடு கிறார். இந்த சூழலில் சில தற்கொலை கள், சில விபத்துகள் அடுத்தடுத்து நடக்கின்றன. தோழியின் மரணம், தந்தைக்கு நேரும் விபத்து ஆகிய அசம்பாவிதங்களுக்கும், செல் போனை ஹேக் செய்யும் கும்பல்தான் காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் ஜீவா. ஆவேசத்தோடு அந்த கும்பலைத் தேடி புறப்படுகிறார். யார் அவர்கள்? அந்த கும்பலிடம் சிக்கிய காதலியை ஜீவா மீட்க முடிந்ததா? என்பது மீதிக்கதை.

படிக்காத மாணவனுக்குள் இருக் கும் கணினி அறிவின் மாயாஜாலம் என்னவெல்லாம் செய்கிறது என்பதை காதல், குடும்ப பாசம் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்கு நர் காளீஸ். கணினி, செல்போன் வழியே ஒருவரது ஒட்டுமொத்த ஜாத கத்தையும் திரட்டிவிட முடியும் என் பதற்காக இயக்குநர் முன்வைக்கும் காரணம், அதை சொல்ல முன்வைக் கும் நடைமுறைத் திட்டங்கள் எல்லாம் எதார்த்தம், நேர்த்தி.

வழக்கமான ஹீரோவுக்கான பங்க ளிப்பைக் குறைவின்றி கொடுக்கிறார் ஜீவா. ஹேக் செய்யும் கும்பலைத் தேடும் பரபர பயணத்தில் கவனிக்க வைக்கிறார். அப்பா - அம்மா சண்டை யின்போது பாசத்தைக் காட்டுவதாக கூறிக்கொண்டு, ஒரு சொட்டு கண்ணீர் விடுவதெல்லாம் படு செயற்கை.

மூளை பலம் பொருந்திய வில்ல னாக கோவிந்த் பத்மசூர்யா கொஞ் சம்கூட அலட்டல் இல்லாமல் சிறப் பாக நடிக்கிறார். ஜீவாவுடனான மோதல் காட்சிகளில் அவரது நடிப்பு பளிச். ஆனால், அந்த வில்லத்தனத்தை இறுதிவரை தக்கவைக்காமல், தத்து வார்த்தமாகப் பேசுவது கதாபாத் திரத்தின் சரிவு.

துணிச்சல் பெண்ணாக வரும் நிக்கி கல்ராணி, நண்பனின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு உதவுவதும், தடுப் பதுமாக வரும் ‘ஆர்ஜே’ பாலாஜி ஆகிய இருவரது பங்களிப்பும் சற்று ஆறுதல். ஆனாலும், அவர்கள் அதையே தொடர்ந்து செய்வது ஒருகட் டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

அனைகா சோட்டிக்கு முக்கிய கதாபாத்திரம். ஆனால், நடிப்பில் அவர் பெரிதாக மெனக்கிடவில்லை. ஜீவாவின் தந்தையான ராஜேந்திர பிரசாத் திடீரென்று உணர்ச்சிவசப் படுவதும், திடீரென்று நண்பனைப் போலப் பேசுவதுமாக அந்த கேரக்ட ருக்கான பலத்தையும், பலவீனத் தையும் சேர்ந்தே சுமக்கிறார். சுஹா சினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர்.

கல்லூரி தேர்வுக்கூடம் தொடங்கி தற்கால கணினி உலகம் வரை பல காட்சிகளில் கண்களை நிறைக்கிறார் கலை இயக்குநர் ரெமியன். எடிட்டர் நாகூரானின் பங்களிப்பும் பாராட் டுக்குரியது. விபத்து, கொலை தொடர் பான காட்சிகளை அதிகம் வன்முறை படரவிடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமா னுஜம். சில இடங்களில் பின்னணி இசை காட்சிகளோடு ஒட்டவில்லை. விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் ஆறுதல்.

முழு தொழில்நுட்ப பின்னணியில் சொல்லப்படும் கதையின் நடு நடுவே காதல், சென்டிமென்ட் போன் றவை இடைச்செருகலாக இருப்ப தோடு கதையின் வேகத்தைக் குறைக் கின்றன. நாயகி அறிமுகம், நாயகன் - நாயகி சந்திப்பு என பல காட்சிகள் துண்டு துண்டாக வருகின்றன. பரபரப் பாக நகரவேண்டிய காட்சிகள் இழு வையாக நீள்வது சோர்வை வர வழைக்கிறது. மிகப்பெரிய விபத்து நடந்தும் ஜீவா கண்டுகொள்ளாமல் செல்வது லாஜிக் இடறல். குழந்தை களை வைத்தே ஆபாசம், வன்முறை போன்றவற்றை திணித்தது கண்டிக் கத்தக்கது.

நாம் வெகுவாக நேசிக்கிற ஒரு செல்போன் அல்லது கணினி நம்மை எப்படி வேட்டையாடுகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய் கிற இந்த ‘கீ’, தடம் மாறி மாறிச் செல் லாமல் இருந்தால் அற்புத பயண மாக இருந்திருக்கும்.

தொழில்நுட்பத்தின் ஆபத்தை சுட்டிக்காட்டிய இயக்குநரின் அக்கறையை பாராட்டலாம்!

mmm.JPG 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close